குட்டைப் பாவாடையும்,இலங்கைப் பாராளுமன்றமும். RASMIN M.I.Sc

 

கடந்த இரண்டு தசாப்த கால யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கை நாடு மிகவும் சுதந்திரமான நாடாக இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரப்பப்படுவதும்,இலங்கை அரசின் அமைச்சர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இது போன்ற செய்திகளை பரப்புவதும் நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயமே!

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து தற்போதைய நிலை வரை இலங்கையில் ஒரு வகையான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஒரளவுக்கு நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும்.

இருந்தாலும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களோ,முக்கிய அமைச்சர்களளோ,அல்லது ஜனாதிபதியோ சொல்வதைப் போல் இலங்கையை ஆசியாவின் ஆச்சர்யம் மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்றால் அது சீச் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாகத் தான் இருக்குமோ என்றும் என்னத் தோன்றுகிறது.

ஏன் என்றால் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் பற்றி சிலாகித்துப் பேசும் இலங்கை அரசு மறுபக்கத்தில் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதானது பொருளாதார முன்னேற்றம் என்ற இலங்கை அரசின் கருத்து வாய் ஜாலம் தான் என்பதைத் தெளிவாக அறிவிப்பதாக  எதிர் கட்சிகள் விமர்சிப்பதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

இதனிடையே இலங்கையின் கலாச்சார சீர்கேட்டைப் பற்றி யாரும் அவதானிக்காமல் இருப்பதும்,சில வேலை கலாச்சாரம் பற்றிப் பேசப்பட்டாலும் அவை பாராளுமன்றம் முதல் தெருவோர டீக்கடை வரை கேளிக்கூத்தாக்கப் படுவதும் மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.

ஏன் எனில் ஒரு நாட்டின் முன்னேற்றம் தங்கியிருப்பது அந்நாட்டின் சிறந்த கலாச்சார முன்னேற்றத்தில் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எந்த நாட்டில் கலாச்சாரம் சீர் கெடுகிறதோ அந்நாட்டின் உண்மையான பொருளாதார,அறிவியல்,அரசியல் வளர்ச்சிகள் தானாகவே சீர்கெட்டுப் போவதை நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

குட்டைப் பாவாடையும்,இலங்கைப் பாராளுமன்றமும்.

இலங்கைப் பாராளுமன்றம்,நாடாளுமன்றம் உட்பட பல இடங்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்படுவது குட்டைப் பாவாடைப் பிரச்சினைதான்.

உலகத்திலேயே குட்டைப் பாவாடைக்கென்று தனியாக விவாதம் நடத்தப் பட்டது இலங்கை பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களாகத் தான் இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் விமர்சனமாகும்.

அதிலும் குறிப்பாக இலங்கைப் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்ட வேலை குட்டைப் பாவாடை அணிந்து பொது இடங்களில் நடமாடுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சில அரசாங்க மற்றும் எதிர்கட்சி அரசியல் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அந்நேரத்தில் இது தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை முன்வைத்த சில அரசியல்வாதிகள் குட்டைப் பாவாடைக்கு வக்காலத்து வாங்கியதும்,குட்டைப் பாவாடை அணிவது அழகானது,மாலினி பொன்சேகா போன்ற சினிமா (ஷைத்தானிய)நடிகைகளை அழகாகக் காட்டியதெல்லாம் இந்த குட்டைப் பாவாடைதான் என்று பேசியதும்,குட்டைப் பாவாடை விஷயம் தொடர்பாக நடிகை மாலினி பொன்சேகா தலைமையில் தான் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பேசியது உலக அரங்கில் இலங்கையின் கலாச்சாரத்தை படம்பிடித்துக் காட்டியது.

கொழும்பு,கம்பஹா,கண்டி,குருநாகல் என்று பிரபல நகரங்களில் நடமாடும் பெண்களின் ஆடை அமைப்பு மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் இவ்வேலையில் இது போன்ற கேடு கெட்ட சட்டங்களையும் நாட்டில் அறிமுகம் செய்தால் நாட்டின் நிலை என்னவாக இருக்கும்?


குட்டைப் பாவாடைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன்வைக்கும் இந்நேரம் இன்னும் சிலர் குட்டைப் பாவாடைக்கும் உள்ளாடைக்கும் வித்தியாசம் தெரியாமல் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிப்பதென்பது பாராளுமன்றத்திற்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்ட நோக்கத்தையே கேள்விக்குறிக்குள்ளாக்குகிறது.

கல்வியறிவோடு தொடர்புடையவர்களை வைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டிய பாராளுமன்ற அவை தீவிரவாதிகளையும்,நடிகைகளையும்,சமுதாய சீர்கேட்டிற்கு சிறந்த கலாச்சார சாயம் பூச நினைக்கும் சந்தர்ப்பவாதிகளையும் கொண்டு நிரப்பப் பட்டால் இதுதான் நிலையாக இருக்கும் என்பதற்கு இலங்கை பாராளுமன்றம் ஒரு முன்னுதாரணமாகும்.


குட்டைப் பாவாடை தொடர்பாக ஒரு அரசியல் பிரமுகர் வெளியிட்ட கருத்தை ஒரு பத்திரிக்கை பிரசுரித்திருந்தது அதனை நாம் கீழே தருகிறோம் அதைப் படிப்பவர்கள் இலங்கை அரசியல் வாதிகளின் சமுதாய முன்னேற்ற(?) நன்னோக்கத்தை(?) தெளிவாக அறிந்து கொள்ள முடியும்

இதே நேரம் இது தொடர்பாக அமைச்சர்கள் மத்தியில் கடும் போக்குடன் செயல்பட வேண்டிய இலங்கை குடியரசின் ஜனாதிபதியவர்களும் குட்டைப்பாவாடை விஷயமாக குட்டைப் பாவாடையின் அளவு என்ன என்று அளக்கப்பட்டுவிட்டாதா? என்றெல்லாம் கிண்டல் கருத்துக்களை வெளியிட்டுள்ளமையானது நியாய சிந்தனை கொண்டவர்களை கவலையுரச் செய்துள்ளது.

ஒரு குட்டைப் பாவாடைக்கு இவ்வளவு ரகளையா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவது இயற்கையே! 

இதற்கு என்னதான் தீர்வு என்று மக்கள் கேள்வியெலுப்பும் இவ்வேலை எந்தக் காரணம் கொண்டும் குட்டைப் பாவாடைக் கலாச்சாரம் தடை செய்யப் படாது என்று இலங்கை அரசின் ஊடக அமைச்சர் கருத்து வெளியிட்டு ஒழுக்கத்தை விரும்பும் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்திருப்பதை நாம் அறிய முடிகிறது.

இஸ்லாமிய கலாச்சார சட்டத்தின் மூலம் மாத்திரம் தான் இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு சொல்ல முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கும் சில இலங்கை அரசியல் பிரமுகர்கள் கூட இதைப் பற்றி பேச முன்வராமையும் கவலைக்கிடமானதாகவே இருக்கிறது.

இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரமே உலகுக்கு தீர்வு என்பதை அனைவரும் புரிந்து கொண்டு உலகின் வளர்சிக்கு சரியாக வித்திட்திட்டவர்களாக நாளைய சமுதாயம் நம்மைப் பற்றிப் பேசுவதற்கு நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற இந்தக் கட்டுரையின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள்இ தமது தந்தையர்இ தமது கணவர்களுடைய தந்தையர்இ தமது புதல்வர்கள்இ தமது கணவர்களின் புதல்வர்கள்இ தமது சகோதரர்கள்இ தமது சகோதரர்களின் புதல்வர்கள்இ தமது சகோதரிகளின் புதல்வர்கள்இ பெண்கள்இ தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்இ ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்இ பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.   அல்குர்ஆன் (24 : 31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும்இ உமது புதல்வியருக்கும்இ (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும்இ நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.    அல்குர்ஆன: (33 : 59)

Post Disclaimer | Support Us

Support Us

The sailanmuslim.com web site  entirely supported by individual donors and well wishers. If you regularly visit this site and wish to show your appreciation, or if you wish to see further development of sailanmuslim.com, please donate us

IMPORTANT : All content hosted on sailanmuslim.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Check Also

Exploitation Of Desperate Hajj Pilgrims By Some Deceitful Hajj Agents By MYM Siddeek –

A Note on My Recent Hajj Pilgrimage Experience. Hajj is a pilgrimage (spiritual duty) made …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.