கட்டுரைப் போட்டிகள் – 2019 (ரபீஉனில் அவ்வல் – 1441)

இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.

ஆய்வுக் கட்டுரை

தலைப்பு : “பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்”

    சொற்கள்        : 4500 – 5000

    மொழி          : தமிழ் மற்றும் சிங்களம்

    தகைமைகள்      : பி.ஏ (B.A), எம். ஏ (M.A) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் பயின்றவர். (College of Education)

    விருதுகள்:

முதலாமிடம்     : ரூபா 100,000

இரண்டாமிடம்   : ரூபா 75,000

மூன்றாமிடம்     : ரூபா 50,000

பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

கட்டுரை

தலைப்புக்கள்:

“நபி முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பன்முக ஆளுமை”;

அல்லது

“நற்குண சீலர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள்”

அல்லது

“மனித நேயம் போதித்த மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள்”

    சொற்கள்   : 1500 – 2000

    மொழி     : தமிழ் மற்றும் சிங்களம்

    தகைமைகள் : உயர் தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள்.

    விருதுகள்  :

முதலாமிடம்     : ரூபா 75,000

இரண்டாமிடம்   : ரூபா 50,000

மூன்றாமிடம்     : ரூபா 30,000

பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

நிபந்தனைகள்

    கட்டுரை சுய ஆக்கமாக இருக்க வேண்டும்.

    இதற்கு முன் எழுதப்பட்ட ஆக்கமாக இருக்கக்கூடாது.

    உசாத்துணைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத விருப்பமுள்ள அனைவரும் பங்குபற்றலாம்.

    பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன கட்டுரையுடன் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

    கட்டுரை எழுத விரும்புவர்கள் 10.12.2019 ஆம் திகதிற்கு முன்பாக ஜம்இய்யாவின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு தங்களை பதிவு செய்;து கொள்ளவேண்டும்.

    கட்டுரைகள் யாவும் 31.01.2020 திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கட்டுரைப் போட்டி 2019” எனக் குறிப்பிடப்படவேண்டும்.

    ஆண்கள், பெண்கள் அனைவரும் பங்குபற்ற முடியும்.

    அனுப்ப வேண்டிய முகவரி:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

281, ஜயந்த வீரசேக்கர மாவத்த,

கொழும்பு -10

    மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்:

   011-7490490 / 077-3185353 (வார நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from Sri lanka Muslims Web Portal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading