அறிஞர் ஜெமீலின் மறைவு சமூகத்துகுப் பேரிழப்பு – தேசிய ஷூரா சபை

அறிஞர் ஜெமீலின் மறைவு சமூகத்துகுப் பேரிழப்பு!

 

நாடறிந்த கல்விமான்  எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது மறைவு குறித்து தேசிய  ஷூரா சபை ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

பட்டதாரி ஆசிரியராககல்வி அதிகாரியாகபல்கலை கழக பதிவாளராகமுஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களப் பணிப்பாளராகமுஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சின் இராஜாங்க செயளாலராகப் பணிப்புரிந்த மர்ஹூம் ஜெமில் சமூகம் சார்ந்தநாடு சார்ந்த பணிகளில் பாரிய பங்களிப்பு வழங்கிய ஒர் அறிஞர்.

 

பரந்த நோக்குஆழமான மொழிப்புலமைஒய்வற்ற தேடல் அவரின் சிறப்பம்சங்களாகும். பல நூற்களை சமூகத்துக்கு வழங்கிய அவரின் இலக்கிய மற்றும் எழுத்துப் பணிகள் தனித்துவமானவை. இலங்கை முஸ்லிம்களின் எழுத்தாக்கங்களின் தொகுப்பாக அவர் வெளியிட்ட சுவடிக் கோவைகள்” அவருக்கேயுரிய தனித்துவமாகும். கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்றத்தின் செயளாலராக இருந்து வருடாந்த நினைவுப் பேருரைகள் மற்றும் அறிஞர் அஸீஸின் ஆக்கங்களை மறுபதிப்புச் செய்து வெளியிடல் போன்ற சேவைகள் குறிப்பிடத்தக்கதாகும். அவற்றை மக்களிடையே பிரபல்யப்படுத்த அரும்பாடுபட்டார்.

 

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சிணை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக அரசினால் நியமித்த குழுவில் ஒர் அங்கத்தவராக இருந்து காத்திரமான அறிக்கையை தயாரித்து  கல்வி அமைச்சுக்கு வழங்குவதில் அயராது உழைத்தார்.

 

கல்விக்காகவே வாழ்ந்துகல்வித் தொண்டு புரிந்த அன்னாரின் பணிகளை அங்கீகரித்து அல்லாஹ் மேலான சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திப்போம்.

 

தலைவர்,

தேசிய  ஷூரா சபை.

Check Also

Centre for Islamic Studies Condemns Horrific killing and Extremism in All Forms

The Centre for Islamic Studies (CIS) condemns religious extremism in all its forms and calls …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RSS
Follow by Email
YouTube
YouTube