;

முஸ்லிம் அமைச்சர்கள் எம்.பிக்களுடன் தேசிய ஷூறா சபை சந்திப்பு

முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுடனான முதற்கட்ட சந்திப்பொன்றை தேசிய ஷூறா சபை 06.02.2015 அன்று கொழும்பில் நடத்தியது.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன், ஹசன் அலி, முன்னாள் அமைச்சர் பௌஸி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், அஸ்லம், பைஸல் காஸிம் ஆகியோர்கலந்துகொண்டனர்.
 
அமைச்சர்களான கபீர்ஹாஷிம், ஹலீம் உட்பட பலரும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சகோதரர் ரிஸா யஹ்யா, ஆலோசனை சபை உறுப்பினர் சகோதரர் அப்துல்பாரி (கனடா), பொதுச் செயலாளர் அப்துல் அஸீஸ், பிரதிப் பொதுச் செயாளார் ஷெய்க் இனாமுல்லாஹ் ஆகியோர் நெறிப்படுத்திய மேற்படி கலந்துரையாடலில், தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு, ஆலோசனை சபை, மற்றும் செயலக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
முஸ்லிம் சமூகத்தின் பிரதான பிரச்சினைகள், அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
 
குறிப்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் சார்ந்த சாதக பாதகங்கள், தேர்தல் முறை சீர்திருத்தங்கள் வடகிழக்கில் முஸ்லிம்களது காணிகள், மீள் குடியேற்றம் மத உரிமைகள் என பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
 
எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை தத்தமது கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய அரசியலில் சகலருக்கும் பொதுவான விவகாரங்களை கலந்துரையாடுவதற்கும், நிபுணத்துவ ஆய்வுகளை ஒன்றிணைந்து மேற்கொள்வதற்காகவும் ஒரு அரசியல் ஆலோசனை சபை ஒன்றை நிறுவதற்கான தேசிய ஷூரா சபையின் முன்மொழிவை வருகை தந்திருந்த சகல மக்கள் பிரதிநிதிகளும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
தேசிய ஷூரா சபை தொடர்ந்தும் ஒரு சிவில் சமூக தலைமைத்துவமாகவே செயற்படும் என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டாது என்றும், முஸ்லிம் சமூகம் சார்ந்த விவகாரங்களை அவ்வப்பொழுது முஸ்லிம் தலைமைகளின் கவனத்திற்கும் அதேவேளை தேசிய அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும் கொண்டு வரும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 
இவ்வாறான கலந்துரையாடல்களை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என இங்கு உடன்பாடும் இணக்கமும் காணப்பட்டமை முக்கிய அம்சமாகும்.
 
–      தேசிய ஷூறா சபை

முஸ்லிம் (1) முஸ்லிம் (2) முஸ்லிம் (3) முஸ்லிம் (4) முஸ்லிம் (5) முஸ்லிம் (6)

Check Also

Major earthquake in Turkey, Syria kills more than 1,400 people

The magnitude 7.8 tremor caused buildings to collapse and was felt as far as Lebanon …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RSS
Follow by Email
YouTube
YouTube